appa !!

https://vocaroo.com/i/s0DZ6TLguyAK

நினைவுகள் நெஞ்சில் பாரமாகதத்தளிப்பதால், இதோ அப்பாவிற்காகஎழுத்துக்களால் ஓர் அர்ச்சனை.

எனது இதயத்திற்கு இனிய என் தாய்மொழியில் ஓர் மலர் மலை. அப்பாவின்உயிரான தமிழ் மொழிஇல் ஓர் நினைவஞ்சலி.

 

தேவர் குலத்தில், வீர தாய்க்கு பிறந்த வீரமகன் எம் அப்பா.

அப்பா நீங்க ஒரு தேவர் மகனா என்றுஆச்சரியத்தோடு கேட்டபோது,

ஆமாமா  மா, தேவர் மகன் தான், ஆனாயாரையும் காத்தியால குத்தினது இல்ல என்றுபுன்னகைத்துக்கொண்டே பெருமிதம்கொண்டாய்.

வீரம் என்பது சொல்லிலும், செயலிலும்இல்லை, அது அன்பிலும், பணிவிலும், நேர்மையிலும், மாசற்ற உன் நடத்தையிலும்புதைந்து உள்ளது என்று இன்று பெருமிதம்கொள்கிறோம்.

வலிக்கிறது அப்பா. எதிர்காலம் கசக்குது.

நினைவுகள் அலை இதயத்தை  நொறுக்குகிறது, அது ஏன் அப்பா உங்களுக்குபுரியவில்லை.

என் பிள்ளை அழுதா தாங்க மாட்டா என்றுபொத்தி பொத்தி வளர்த்தயே, இன்று நீஇல்லாத இந்த உலகில், சிறகு இல்லாதபறவையாய் மண்ணில் வலியில் துடிப்பதுஉனக்கு இனிக்கிறதாஎன்ன ?

சொர்கலோகத்தில் சோகம் கொன்றையோ நீ?

பாதியில் எம் மகளை விட்டு விட்டேனே என்றுநீ இன்று கலங்குகிறாயோ?

என் மகனை கட்டி பிடிக்க, அவன் பெற்ற  செல்வங்களை முத்தமிட்டு ரசிக்கதவறிவிட்டானே என்று வேதனை படுகிறாயாஅப்பா?

வாழும் காலம் வரை, அப்பா இருக்கேன் மா, கவலை படாதே, அப்பா இருக்கேன் மா, என்றஉன் பொய் சாத்தியங்கள் உனக்குநினைவில்லயா அப்பா?

எதிர்காலம் கேலி செய்கிறது.

எப்படி நீ வாழ்வாய்,

உன் உயிரான அப்பா இல்லாமல் உன்னையார் காப்பாற்றுவார்,

என்று எதிர்காலம் கேலி செய்கிறது.

நிகழ் காலமோ, செய்வதறியாது உறைந்துநிற்கிறது.

நாட்கள் நகரவில்லை, நொடிகள்நீங்கவில்லை, நீ இல்லாத உன் மளிகைவீட்டில் உன் சிரிப்பொலிகள் நிற்கவில்லை.

எங்கள் குழந்தைகளை கொஞ்ச, அவர்களைநெஞ்சோடு அரவணைக்க உனக்கு ஏக்கம்இல்லையா அப்பா?

எங்களுக்கு ஏக்கம் தலைவிரித்தாடுகிறது. நீகொஞ்சி விளையாடுவதை காண.

உன்னை போல் இருக்கும் என் மகனை நீமுத்தமிடும் காட்சி கற்பனையில் இனிக்கிறது.

வீர மண்ணில் பிறந்தாய், புண்ணியனாகவாழ்ந்தாய், விடை ஒன்று தராமல், சுயநலவாதியை மரித்தாய்.

காலங்கள் ஓட, பருவங்கள் மாற, காயங்கள்கரைந்து போகம் என்று பலரும் பல இனிக்கும்பொய்களை கூறினார்கள்.

காலமும் செல்லவில்லை, பருவமமும்மாறவில்லை, உங்கள் நினைவுகளும்நீங்கவில்லை, எங்க காயங்களும்ஆறவில்லை.

30 வருடங்கள் என்னை பொன்னாய் பூவாய்தோழிலும் மடியிலும் சுமந்தாய்,

திடீரென்று நானும் என் கருவில் இருந்தபச்சிளம் குழந்தையும் பாரமாக தோன்றியதாஎன்ன ?!

நாங்கள் சிரித்து விளையாடும் அழகைபார்க்காமல் பறந்து சென்றாயே.

யாருக்கு யார் பாரம் அப்பா.

எங்கள் வாழ்க்கையின் நிஜம் நீயே.

நிஜங்களை கல்லறையில் புதைத்தோம்; வெறும் நிழலை கட்டி பிடித்த்துகொஞ்சுகின்றோம் !!

சில நாட்கள், நல் இரவில், ‘அப்பாவைகூப்பிட்டிய மா’ என்று என்னை தட்டிஎழுப்புவாய். இல்ல பா, போய் தூங்குங்கஎன்று எரிச்சலோடு நான் பதிலளிக்க, தாய்அருகே செய் போலே, என் கட்டில் அருகில்சுருண்டு கிடப்பாய்.

என் காவல் தூதனை போல்.

என்னக்கு வரவிருந்த பல விபத்துகளை நீதாங்கி கொண்டாய்.

இன்று காக்க நீ இல்லை,

அருகில் உன் மெல்லிய மூச்சு காற்று இல்லை,

நான் மட்டும், இந்த நல் இரவில், தனிமையில்,

அப்பா என்று மனம் நொறுங்குகிறான், கேட்கநீ இல்லை,

என் அருகில் என் அப்பா இல்லை,

என் காவல் தெய்வம் இல்லை.

குறை ஒன்றும் இல்லை என் நிறையே!!

குறை என்றாலும் அது ஒன்றே,

கருவறையில் நீ என்னை சும்மக்க மறுத்ததினமே!!

விடிந்ததும் அப்பா நான் வருவேன் என்றான்ஆவலாய் தயங்கி நின்றேன்;

மூன்று வருடங்கள் ஆகியும் விடிய மறுக்கிறதுஎன் இரவுகள் !!

பொன்னும் பொருளும் என்ன,

இந்த பெரும் புகழும் என்ன,

உன்னை மீட்க வக்கில்லாத இந்த பெண்பிள்ளையின் அர்த்தம்  என்ன ?

 

எத்தனை சிரித்தாலும், அதில் ஒரு பங்குவெறுமை தான்,

எத்தனை அழுதாலும், அது அத்தனையும் உன்நினைவில் தான் !!

 

பெண் குழந்தைக்கு எதற்கு இதனைஆரவாரம், என்று கேட்டவர்கள் வெட்கமடைய, என்னை தலையில் தூக்கி வைத்து ஆடினாய்.

உன் மறைவிற்கு பிறகு, என்னக்கும் அதேகேள்வி தான்,

மரண படுக்கையில் ஒரு கடைசி முறை உன்கை பிடிக்க, உன் கண் பார்த்து, இன்னும்கொஞ்ச நாள் கூட இருந்துட்டு போ பா, என்பச்சிளம் பிள்ளையின் முகம் பார்த்துகொஞ்சிட்டு போ பா,

உன்ன பாத்துக்க  நான் இருக்கேன் பா,

என்று கூற மறுத்த,

இந்த பெண் குழந்தைக்கு எதற்கு இதனைஆரவாரம் உனக்கு.

 

 

அப்பா என்பது ஒரு மாத்திரை சொல் !!

இன்றும் அவர் இல்லையென்றாலும், அவர்விட்டு சென்ற நினைவுகள் உயிரைதாங்குகிறது.

நன்றி அப்பா, சுவடுகளை விட்டுசென்றத்துக்கு.

நல்ல தங்கப்பனாய், எங்கள் தகப்பனாய்,

நீ செய்த தியாகங்களுக்கு ஈடு கட்டவக்கில்லை,

கடனாளியாய்,

கண்ணீர் மட்டுமே பதிலாய்,

இன்று வெறும் கைகொடு அண்ணார்ந்துபார்க்கிறோம்.

 

மேகத்தின் இடையில் நீ புன்னகைத்தாலோ !!

நிலாவின் மறைவில் நீ கொஞ்சி நின்றாலோ!!

என்னென்ன கனவுகள் அப்பா,

நீ இல்லது  இந்த பாவி மகள் படும் வேதனையும்,

நீ விட்டு சென்ற உன் செல்ல மகனின் அனாதை கோலமும்  உனக்கு புரியவில்லையே !!

 

இந்த நிலைமை குறித்து செய்திவந்திருந்தால், ஒரு முறை, ஒரே ஒரு முறை, கனவில் வந்து, தலை கொதி, நெத்திமுத்தமிட்டு போ அப்பா !!

 

ஏக்கத்தோடு உன் பிரியமான மகள் !

IMG_4655-1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s